திங்கள், நவம்பர் 16, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலகிருஷ்ணன்.. போலீசார் மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!

காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலகிருஷ்ணன்.. போலீசார் மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரணம் தொடர்பாக அவரது மனைவி கண்ணீர் மல்க பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஏலக்காய் எரிந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டு புகார் அளித்த தனது கணவரையே குற்றவாளியாக்க போலீசார் முயற்சி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், கடந்த சில நாட்களாகவே தனது கணவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், எரிந்த ஏலக்காயால் ஏற்பட்ட இழப்பை அவரிடமே சுமத்துவதற்கு போலீசார் முயன்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் தனது குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டதாகவும், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்து தவிப்பதாகவும் கூறி அவர் கண்ணீர் விட்டுள்ளார். அவரது இந்தக் குற்றச்சாட்டுகள் சம்பவம் தொடர்பான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.