காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், காவல் நிலைய கழிவறையில் பாலகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 6 மாதங்களில் அரசு காவலில் 8-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபோன்ற உயிரிழப்புகள் தொடரக்கூடாது என வலியுறுத்திய அவர், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நிர்வாகக் குளறுபடிகளுக்காக அப்பாவி மக்களின் உயிர்களை அடகு வைக்க முடியாது என்றும் தனது கண்டனப் பதிவில் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)