புதன், நவம்பர் 11, 2026
உண்மையின் குரல்
சினிமா

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற காவ்யா மாறன் – அனிருத் திருமணம்!

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற காவ்யா மாறன் – அனிருத் திருமணம்!

 

சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் பிரபல இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஐரோப்பிய நாடான கிரீஸில் திருமணம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமண விழாவில் அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு காவ்யா மாறனின் கையைப் பிடித்தபடி நடந்து வரும் புகைப்படத்தை அனிருத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன், “வாழ்நாளில் ஒருமுறை, வாழ்நாள் முழுமைக்கும் உரியது” என்ற உணர்வுபூர்வமான வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு அவர்களது புதிய வாழ்க்கைப் பயணத்தின் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.