பெண்களின் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை – நடிகர் துல்கர் சல்மான்!

'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் துல்கர் சல்மான், பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
பெண்களின் வாழ்க்கையில் அவர்களது சுதந்திரத்தில் தலையிடவோ, எந்தவொரு செயலுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரம் தங்களிடம் இருப்பதாகக் கருதவோ கணவன், சகோதரர் அல்லது தந்தை என யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூகக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் கடந்து விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற கனவை நோக்கிப் பயணிக்கும் ஒரு பெண்ணின் கதையை இப்படம் மையமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அந்தப் பெண்ணின் கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் துணையாக நிற்பதே படத்தின் முக்கியக் கரு என்றும் தெரிவித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம், அதன் கதைக்களம் மற்றும் கருத்துகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.




கருத்துகள் (0)