செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதலில் முறைகேடு புகார்! உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதலில் முறைகேடு புகார்! உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும், முறைகேடுகள் தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் கோப்புகளையும் உடனடியாகப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது இந்தப் புகார் தொடர்பாக நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறது என்பது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.