திருவண்ணாமலையில் பெரும் சோகம்: ஏரியில் மூழ்கி 4 மாணவிகள், செவிலியர் உயிரிழப்பு! தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் குளிக்கச் சென்ற தனியார் காப்பகத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் மற்றும் விடுதி செவிலியர் என மொத்தம் ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆணாய்பிறந்தான் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த விஜயலட்சுமி, அல்லி, பூமிகா, வள்ளியம்மாள் ஆகிய நான்கு மாணவிகளும், விடுதி செவிலியர் தேன்மொழியும் சமுத்திரம் பெரிய ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஐந்து பேரும் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஒரே சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ள இந்தச் சோகம் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)