வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
அரசியல்

கு.செல்வப்பெருந்தகையின் அரசியல் பயணம் – பல்வேறு பொறுப்புகளை வகித்து உயர்ந்த தலைமைப் பதவி!

கு.செல்வப்பெருந்தகையின் அரசியல் பயணம் – பல்வேறு பொறுப்புகளை வகித்து உயர்ந்த தலைமைப் பதவி!

 

புரட்சி பாரதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் பணியாற்றிய கு. செல்வப்பெருந்தகை, 2006-ஆம் ஆண்டு மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், அக்கட்சியின் மாநில பட்டியலினப் பிரிவு தலைவராகப் பொறுப்பு வகிக்கும் அளவுக்கு உயர்ந்தார். 2021-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதுடன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் செயல்பட்டார்.

இதையடுத்து, 2024 முதல் 2026 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பு வகித்தார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்ற பட்டியலினத் தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.