திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

நிறுவனம்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையம்
பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்கள்: 2
பணியிடம்: புதுக்கோட்டை
சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை
விண்ணப்பக் கட்டணம்: இல்லை

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பதும் அவசியம்.

வயது வரம்பு:

OC பிரிவினர் – 18 முதல் 30 வயது வரை
BC / MBC / DNC பிரிவினர் – 18 முதல் 32 வயது வரை
SC / SCA / ST பிரிவினர் – 18 முதல் 35 வயது வரை

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகளும், ஆதரவற்ற விதவைகளுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் தொடங்கும் நாள்: 26.10.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.11.2026

விண்ணப்பிக்க விரும்புவோர், அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பில் உள்ள தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களைச் சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.