தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கு ரூ.18.45 கோடி வட்டித் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் வீடு, மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பெற்ற 6,496 ஒதுக்கீட்டாளர்களுக்கு ரூ.18.45 கோடி வட்டித் தள்ளுபடி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக ஓராண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, 2026 மார்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக் காலம் முடிவடைந்தும், நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் உள்ள பயனாளிகள் இந்தச் சலுகையைப் பெறத் தகுதி பெறுவார்கள்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தொகைகளைச் செலுத்தி, வட்டித் தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தி பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.




கருத்துகள் (0)