சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்!

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்!

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும். ஆரம்பத்திலேயே இதனை கண்டறிவது சிகிச்சை பெறுவதற்கும், பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சிலருக்கு மரபணு மாற்றங்கள் மற்றும் குடும்பத்தில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

 

மார்பகத்தில் புதிதாக கட்டி அல்லது வீக்கம் தென்படுவது, மார்பகத்தின் தோலில் மாற்றங்கள் ஏற்படுவது, சிவந்து காணப்படுவது, ரத்தப்போக்கு அல்லது காயம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யக்கூடாது. சிலருக்கு இரவில் அதிக வியர்வை, மூட்டு வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

 

மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க சில ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றலாம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது, உடல் எடையை சீராக பராமரிப்பது, தினசரி உடற்பயிற்சி செய்வது, புகைபிடிப்பதை தவிர்ப்பது போன்றவை ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. மேலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

 

மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கவனித்து, வயது மற்றும் குடும்ப மருத்துவ வரலாற்றுக்கு ஏற்ப மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.