ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு.. 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை!

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு.. 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கு தஞ்சாவூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட சின்னப்பா, கார்த்திக், மைதீன் ஆகிய 3 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒவ்வொரு குற்றவாளியும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீபா உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.