சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனத்தில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சி பணியிடங்கள் அறிவிப்பு!

என்எல்சி நிறுவனத்தில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சி பணியிடங்கள் அறிவிப்பு!

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் மற்றும் மைனிங் உள்ளிட்ட பொறியியல் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இந்த பணிகளுக்கு பி.இ., பி.டெக் படிப்புகளை முடித்தவர்களும், கேட் 2025 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் என்எல்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nlcindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 14, 2026 கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ளவர்கள் அதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.