சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ஹைதராபாத்தில் தனிமையில் வசித்து வந்த மென்பொருள் பெண் ஊழியர் உயிரிழப்பு!

ஹைதராபாத்தில் தனிமையில் வசித்து வந்த மென்பொருள் பெண் ஊழியர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்துஜா என்கிற துஷாரிகா (36), ஹைதராபாத் மியாபூர் பகுதியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற அவர், அதன் பின்னர் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தனது நிலை குறித்து கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நவம்பர் 26-ம் தேதி அவரது நண்பர் ராஜிரெட்டி தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். பலமுறை அழைத்தும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த நண்பர், தொடர்ந்து விசாரித்தபோது இந்தச் சம்பவம் தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து மியாபூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.