ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
ஆரோக்கியம்

மிகவும் சூடான டீ, காபி குடிக்கிறீர்களா? உணவுக்குழாய் புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கை!

மிகவும் சூடான டீ, காபி குடிக்கிறீர்களா? உணவுக்குழாய் புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கை!

காலை எழுந்ததும் காபி, பகல் நேரத்தில் டீ என பலரது அன்றாட வாழ்க்கையில் தேநீர் மற்றும் காபி முக்கிய இடம்பிடித்துள்ளன. பால் தேநீர், பிளாக் டீ, கிரீன் டீ என பல வகைகளில் தங்களுக்குப் பிடித்த பானங்களை மக்கள் அருந்தி வருகின்றனர். குறிப்பாக சிலர் டீ, காபியை நன்றாகக் கொதிக்கும் சூட்டிலேயே குடிக்க விரும்புகின்றனர்.

 

ஆனால் அளவுக்கு அதிகமான சூட்டில் இருக்கும் பானங்களைத் தொடர்ந்து குடிப்பது உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக 65 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையில் உள்ள பானங்களை அருந்துவது உணவுக்குழாயின் உட்புற செல்களில் பாதிப்பை ஏற்படுத்தி, உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எனவே டீ, காபி உள்ளிட்ட பானங்களை கொதிக்கும் சூட்டில் அருந்துவதைத் தவிர்த்து, ஓரளவு ஆறிய பிறகு குடிப்பது நல்லது. பானத்தின் வகையைவிட அதை அருந்தும் வெப்பநிலைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.