வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
அரசியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார் – தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு!

முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார் – தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், முன்னாள் திமுக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி பண மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அருண்ராஜ் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

 

அரசு ஒப்பந்தங்கள் மற்றும் மணல், ஜல்லி குவாரி தொழில் தொடர்பான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி, தன்னிடமிருந்து சிவசங்கர் மொத்தம் ரூ.3.35 கோடி பெற்றதாக அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், உறுதியளித்தபடி வாய்ப்புகளைப் பெற்றுத் தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, லாரியை ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில், தொழிலதிபர் அருண்ராஜ் முன்வைத்துள்ள புகார்கள் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணைக்குட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.