மூதாட்டி வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளை: தவெக நிர்வாகி கைது – கட்சியில் இருந்தும் அதிரடி நீக்கம்!

நெல்லை பகுதியில் 70 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து 13 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி இசக்கிராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புகார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், அதன் அடிப்படையில் இசக்கிராஜாவைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இசக்கிராஜா மீது கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகக் கட்சி அறிவித்துள்ளது.




கருத்துகள் (0)