வியாழன், அக்டோபர் 29, 2026
உண்மையின் குரல்
அரசியல்

நவ.1-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

நவ.1-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

 

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் நவம்பர் 1ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள், தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதிமுகவில் அடுத்தகட்ட அரசியல் மற்றும் கட்சி செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.