ஒரே குடும்பத்தில் இருவர் பயிர்க்கடன் பெற்றிருந்தால் ரூ.75,000 தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? வெளியான முக்கிய விளக்கம்!

அரசு அறிவித்துள்ள ரூ.75,000 பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்கள் இருவர் தனித்தனியாக பயிர்க்கடன் பெற்றிருந்தால், அவர்களில் யாருக்கு கடன் தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.
இதற்கான விதிமுறைகளின்படி, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்க்கடன்களைப் பெற்றிருந்தால், அந்தக் கடன்கள் அனைத்தும் தனித்தனியாக தள்ளுபடி செய்யப்படாது. மாறாக, தள்ளுபடிக்கு தகுதியான கடன்களில் அதிகபட்ச சலுகை கிடைக்கக்கூடிய ஒரு கடன் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
இதே நடைமுறை ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் தனித்தனியாக பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இருவரில் யாருடைய கடன் அதிகபட்ச தள்ளுபடிக்கு தகுதி பெற்றுள்ளதோ, அந்தக் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, ஒரே குடும்பத்தில் இருவர் கடன் பெற்றிருப்பதால் இருவருக்கும் தனித்தனியாக ரூ.75,000 தள்ளுபடி கிடைக்கும் எனக் கருத முடியாது. விவசாயிகள் தங்களது கடன் விவரங்களையும் தகுதி நிபந்தனைகளையும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.




கருத்துகள் (0)