தமிழகத்தில் இன்று வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று (நவம்பர் 16) சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட கடலோர தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழைக்கான சூழல் நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதர தமிழக மாவட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் வானிலை பொதுவாக வறண்ட நிலையில் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்டங்களுக்கு ஏற்ப வானிலையில் மாறுபாடுகள் காணப்பட வாய்ப்புள்ளது.




கருத்துகள் (0)