வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
அரசியல்

பெண்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

பெண்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறுவதாகக் கூறப்படும் பாலியல் தொல்லை சம்பவங்களை முன்வைத்து, முதலமைச்சர் விஜய்க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவலைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், கோவை மாவட்டம் காரமடையில் தவெக நிர்வாகி மீது பெண் நிர்வாகி ஒருவர் புகார் அளித்த விவகாரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழக பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, “தவெகவினரிடமிருந்தே தமிழக பெண்களை பாதுகாக்க முடியாத உங்களுக்கு முதலமைச்சர் பதவி எதற்கு?” என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.