70 ஆயிரம் நூல்கள் கொள்முதலில் முறைகேடு? உதயநிதியிடம் விசாரணை நடத்த மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்!

தமிழகத்தில் 70 ஆயிரம் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முறைகேடு மற்றும் போலி நூல்கள் தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்குப் பொறுப்பு வகித்த உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நூல் கொள்முதல் விவகாரத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தின் தீவிரத்தை மறைக்கும் நோக்கில் திமுக பல்வேறு திசைகளில் கவனத்தைத் திருப்ப முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, 70 ஆயிரம் நூல்கள் கொள்முதல் தொடர்பாக எழுந்துள்ள புகார்களுக்கு உதயநிதி ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)