திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
அரசியல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தவெக நிர்வாகிகள் 3 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தவெக நிர்வாகிகள் 3 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

 

 

கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் தவெக நீலகிரி மாவட்ட இணைச் செயலாளர் நசீப், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் மாவட்ட துணைச் செயலாளர் ஸ்ரீஜித் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமீர் அப்பாஸ் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கெனவே நாகையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் தவெகவைச் சேர்ந்த பூபாலன் சிக்கிய விவகாரம் பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில், மேலும் மூன்று நிர்வாகிகள் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.