புதன், நவம்பர் 25, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

புதிய ஆடைகளை துவைக்காமல் அணிந்தால் சரும பாதிப்பு ஏற்படுமா?

புதிய ஆடைகளை துவைக்காமல் அணிந்தால் சரும பாதிப்பு ஏற்படுமா?

கடைகளில் புதிதாக வாங்கும் ஆடைகளை துவைக்காமல் நேரடியாக அணிவது சருமத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என தோல் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புதிய ஆடைகள் தயாரிக்கப்படுவது முதல் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படும் வரை பல்வேறு நிலைகளை கடந்து வருவதால், அவற்றில் ரசாயனப் பொருட்கள், சாயங்கள் மற்றும் தூசிகள் படிந்திருக்க வாய்ப்புள்ளது.

 

இந்த ஆடைகளை துவைக்காமல் அணியும்போது, அதில் உள்ள ரசாயனங்கள் மற்றும் சாயங்கள் சருமத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு அரிப்பு, சிவத்தல், ஒவ்வாமை மற்றும் சில நேரங்களில் தொற்று பாதிப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமையலாம். குறிப்பாக உணர்திறன் அதிகம் கொண்ட சருமம் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

 

எனவே, புதிதாக வாங்கிய ஆடைகளை முதல் முறை பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு துவைத்து, முழுமையாக உலர்த்திய பிறகு அணிவது நல்லது. இந்த எளிய பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் சரும எரிச்சல் மற்றும் தேவையற்ற ஒவ்வாமை பாதிப்புகளைத் தவிர்க்க உதவும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.