வியாழன், நவம்பர் 26, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

2 பொருட்கள் போதும் கடைகளில் வாங்கும் வெண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம்!

2 பொருட்கள் போதும் கடைகளில் வாங்கும் வெண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம்!

கடைகளில் விற்கப்படும் வெண்ணெயை வீட்டிலேயே எளிய முறையில் தயாரித்துக் கொள்ளலாம். கெட்டியான ஆடை (கிரீம்) மற்றும் சிறிதளவு உப்பு ஆகிய இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்தி சுவையான வெண்ணெய் தயாரிக்க முடியும். இதற்கு அதிக நேரமோ, சிக்கலான செய்முறைகளோ தேவையில்லை.

 

முதலில் கெட்டியான ஆடையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, வெண்ணெய் தனியாகப் பிரியும் வரை நன்றாக அடிக்க வேண்டும். அடிக்கும்போது கிரீமில் உள்ள கொழுப்பு திரண்டு வெண்ணெயாக மாறும். அப்போது பிரிந்து வரும் திரவத்தை வடிகட்டி, வெண்ணெயைத் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளலாம்.

 

இந்த முறையில் வீட்டிலேயே தயாரிக்கும் வெண்ணெயில் தேவையற்ற சேர்க்கைப் பொருட்களை தவிர்க்க முடியும். புதிதாக தயாரித்த வெண்ணெயை உணவுகளில் பயன்படுத்துவதுடன், ரொட்டி உள்ளிட்டவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம். சுத்தமான பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிப்பதால், சுவையான வெண்ணெயை எளிதாகப் பெற முடியும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.