புதன், நவம்பர் 25, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு டிசம்பர் 1 முதல் ஆன்லைன் வருகைப் பதிவு கட்டாயம்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு டிசம்பர் 1 முதல் ஆன்லைன் வருகைப் பதிவு கட்டாயம்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் வருகைப் பதிவு நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. ஊழியர்களின் பணி நேரத்தை முறையாக கண்காணிப்பதுடன், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்தை உறுதி செய்யும் நோக்கில் டாஸ்மாக் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

 

இதுவரை எழுத்துப்பூர்வமாக பராமரிக்கப்பட்டு வந்த வருகைப் பதிவேடு முறை மாற்றப்பட்டு, கையடக்க கருவி வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. ஊழியர்கள் தினமும் 8 மணி நேரம் பணியாற்றுவதை உறுதி செய்வதுடன், அரசு அங்கீகாரம் இல்லாத நபர்களை தங்களுக்கு பதிலாக பணியில் அமர்த்திவிட்டு செல்வதைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

 

இதன் மூலம் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வருகை, பணிநேரம் மற்றும் வேலை ஒழுங்கு ஆகியவற்றை நிர்வாகம் முறையாக கண்காணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.