வியாழன், நவம்பர் 26, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 25) மாநிலத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து பெய்து வரும் மழையுடன் இன்று மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் வானிலை நிலவரத்தை கவனித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.