புதன், நவம்பர் 25, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவை அரசு முறையாக அமல்படுத்தியிருந்தால் தற்போது எழுந்துள்ள பிரச்சினையை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், பக்தர்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டதாக மக்கள் கருதுவதாகக் கூறிய நயினார் நாகேந்திரன், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.