புதிய BSNL சிம் வாங்கினால் ரூ.1 மட்டுமே! இலவச சிம், தினமும் 1GB டேட்டா – அதிரடி சலுகை அறிவிப்பு!

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ‘Freedom 2.0’ என்ற பெயரில் சிறப்புச் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, புதிதாக சிம் கார்டு வாங்க விரும்புவோர் வெறும் ஒரு ரூபாய் செலுத்தி சிம் கார்டைப் பெற்றுக்கொள்ளலாம். இதனுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 1 ஜிபி அதிவேக இணைய டேட்டாவும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை நவம்பர் 11ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ‘Freedom 2.0’ திட்டத்தின் பலன்களை ஏற்கெனவே பிஎஸ்என்எல் இணைப்பைப் பயன்படுத்தி வருபவர்கள் பெற முடியாது. புதிதாக சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.




கருத்துகள் (0)