புதன், நவம்பர் 11, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பில் இனி சாட் மூலமாகவே மின்கட்டணம் செலுத்தலாம்! புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் மெட்டா நிறுவனம்!

வாட்ஸ்அப்பில் இனி சாட் மூலமாகவே மின்கட்டணம் செலுத்தலாம்! புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் மெட்டா நிறுவனம்!

 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் அன்றாட தேவைகளை மேலும் எளிதாக்கும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இனி வாட்ஸ்அப் சாட் மூலமாகவே மின்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.

இதன் மூலம் மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், எரிவாயு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான தொகையைச் செலுத்துவதற்கு தனித்தனி செயலிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் உரையாடல் வசதியிலேயே கட்டணங்களைச் செலுத்தக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாட்ஸ்அப்பின் செயல்திறனை மேம்படுத்தவும் மெட்டா திட்டமிட்டுள்ளது. பயனர்களின் தேவைகளை விரைவாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ற சேவைகளை வழங்குவது, உரையாடல்களை எளிதாக்குவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

அதேபோல், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும் வகையில் மெசேஜ்கள் மற்றும் குரல் அழைப்புகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் சேவைகளைச் செயல்படுத்துவதற்காக மெட்டா நிறுவனம் சுமார் ரூ.8,550 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி அன்றாடப் பணிகளையும் ஒரே செயலி மூலம் மேற்கொள்ளும் வசதி பயனர்களுக்குக் கிடைக்கும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.