வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தால் ஐடி துறையில் ஆட்குறைப்பு தீவிரம் – மைக்ரோசாப்ட், ஆரக்கிள் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

AI தொழில்நுட்பத்தால் ஐடி துறையில் ஆட்குறைப்பு தீவிரம் – மைக்ரோசாப்ட், ஆரக்கிள் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சில நிறுவனங்களில் பணியாளர்களின் தேவை குறைந்து, ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுமார் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், ஆரக்கிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதுதவிர, கூகுள், மெட்டா உள்ளிட்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது பணியாளர் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மாற்றியமைத்து வரும் நிலையில், ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு தொடர்பான கவலைகளும் அதிகரித்து வருகின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.