செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ரூ.500 நோட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டுமா?… பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த முக்கிய கோரிக்கை… என்ன காரணம் தெரியுமா?..!!

ரூ.500 நோட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டுமா?… பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த முக்கிய கோரிக்கை… என்ன காரணம் தெரியுமா?..!!

 

 

இந்தியாவில் பணப்புழக்கம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக புதிய விவாதத்தை ஏற்படுத்தும் வகையில், ரூ.500 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தற்போது இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டாக ரூ.500 உள்ளது. ஏற்கெனவே கடந்த 2023ஆம் ஆண்டு ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரூ.500 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தை சந்திரபாபு நாயுடு முன்வைத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்குவதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கருப்புப் பணம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.2,000 நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் கரன்சி தொடர்பான திட்டங்களை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

 

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் விளைவுகள் குறித்து அப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்திருந்தன.

 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு மீண்டும் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை நீக்குவது தொடர்பான கருத்தை முன்வைத்துள்ளார்.

 

இதனுடன் தேர்தல் நடைமுறைகளிலும் மாற்றங்கள் தேவை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல்களில் பண விநியோகத்தைக் கட்டுப்படுத்தி, பணபலத்தை விட பொதுச்சேவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

சந்திரபாபு நாயுடுவின் இந்தக் கருத்துகள் நாட்டின் பணப்புழக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.