வெள்ளி, நவம்பர் 06, 2026
உண்மையின் குரல்
இந்தியா

பெங்களூருவில் குடும்பப் பிரச்சினையால் மனைவி உட்பட 7 பேர் கொலை: கணவர் கைது!

பெங்களூருவில் குடும்பப் பிரச்சினையால் மனைவி உட்பட 7 பேர் கொலை: கணவர் கைது!

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகரைச் சேர்ந்த இந்து சேகர் என்பவர், தனது மனைவி சுனிதா உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதலே திட்டமிட்டு இந்தக் கொலைகளைச் செய்ததாக இந்து சேகர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆட்டுக்கல்லைப் பயன்படுத்தி தாக்கி 7 பேரையும் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடந்த நவம்பர் 3ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அதன் மூலம் இந்தக் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைச் சிக்கபல்லாபூர் பகுதிகளில் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.