தவெகவினருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது! விஜய்யை விமர்சித்த ஜெயக்குமார்!

தவெக நிர்வாகிகளுக்கு நாட்டில் நடைபெறும் அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த புரிதல் இல்லை என்றும், நிலைமை தெரிந்திருந்தால் வாக்காளர் பட்டியல் தொடர்பான கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றிருப்பார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மேலும், தவறு செய்யும் எம்.எல்.ஏ.க்கள் மீது முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தவறு செய்ததாகக் கூறப்படும் எம்.எல்.ஏ.க்களைக் கண்டிக்காமல், அவர்களுக்கு விருந்தளித்து தீபாவளிப் பரிசுகளை வழங்கி அனுப்புவதாகவும் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான விவகாரத்தில் தனது கருத்தை ஆவேசமாக வெளிப்படுத்திய ஜெயக்குமார், அந்த இடத்தில் தான் இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட நபரை நிச்சயம் என்கவுன்ட்டர் செய்திருப்பேன் என்று கூறியுள்ளார். ஜெயக்குமாரின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.




கருத்துகள் (0)