டெல்லி வருமான வரித்துறையில் 119 வேலைவாய்ப்புகள்: 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!

டெல்லி வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் 119 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டெனோகிராபர் கிரேடு-2 பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியும், வரி உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், பல்நோக்குப் பணியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம்.
தடகளம், நீச்சல், கிரிக்கெட், கபடி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஸ்டெனோகிராபர் மற்றும் வரி உதவியாளர் பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரையும், பல்நோக்குப் பணியாளர் பணிக்கு 18 முதல் 25 வயது வரையும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நவம்பர் 10ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகள் மற்றும் விதிமுறைகளைச் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.




கருத்துகள் (0)