ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
அரசியல்

திமுக ஆதரவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர் துரோகம் செய்ததாக வானதி சீனிவாசன் விமர்சனம்!

திமுக ஆதரவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர் துரோகம் செய்ததாக வானதி சீனிவாசன் விமர்சனம்!

திமுகவின் ஆதரவு மற்றும் தொண்டர்களின் உழைப்பால் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர், தற்போது திமுகவுக்கே துரோகம் செய்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவையில் இன்று (நவ.29) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியினர் திமுகவை விமர்சிப்பது நியாயமற்றது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

 

தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை குறையக்கூடாது என்ற நிபந்தனையுடன் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த திமுகவுக்கு வானதி சீனிவாசன் நன்றி கூறினார். பெண்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததற்காகவும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

 

மேலும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றும், பிரதமர் மோடிக்கு எந்த மாநிலத்தையும் வஞ்சிக்கும் நோக்கம் இல்லை என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.