புதன், அக்டோபர் 28, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தீபாவளிக்கு முன்பே ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. பொதுமக்களுக்கு அதிர்ச்சி..

தீபாவளிக்கு முன்பே ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. பொதுமக்களுக்கு அதிர்ச்சி..

 

 

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்திச் செலவுகள் உயர்ந்துள்ளதே இந்த விலை மாற்றத்திற்குக் காரணமாக கூறப்படுகிறது.

 

ஆவின் நிறுவனம் 230-க்கும் மேற்பட்ட வகையான பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் 63 பொருட்களின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை ரூ.80 உயர்ந்து தற்போது ரூ.770 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரை கிலோ வெண்ணெய் விலை ரூ.45 அதிகரித்து ரூ.320 ஆகியுள்ளது.

 

மேலும் பால்கோவா, குலாப் ஜாமூன், ரசகுல்லா, மைசூர்பாகு உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகளின் விலையும் பாக்கெட்டுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 

இதனுடன் தயிர், மோர், லஸ்ஸி மற்றும் பல்வேறு வகையான மில்க் ஷேக்குகளின் விலைகளும் ரூ.2 முதல் ரூ.10 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் பலகாரங்கள் மற்றும் இனிப்புகள் தயாரிக்க பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில், ஆவின் பொருட்களின் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு கூடுதல் செலவுச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.