செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

டிவி பார்க்கும்போது எவ்வளவு தூரத்தில் அமர வேண்டும்? கண்களைப் பாதுகாக்க உதவும் வழிகாட்டுதல்!

டிவி பார்க்கும்போது எவ்வளவு தூரத்தில் அமர வேண்டும்? கண்களைப் பாதுகாக்க உதவும் வழிகாட்டுதல்!

தொலைக்காட்சியை நீண்ட நேரம் பார்ப்பவர்கள் திரைக்கு மிக அருகிலோ அல்லது தேவைக்கு அதிகமான தொலைவிலோ அமர்வதைத் தவிர்க்க வேண்டும். டிவியின் திரை அளவுக்கு ஏற்ற இடைவெளியில் அமர்ந்து பார்ப்பது கண்களுக்கு ஏற்படும் சோர்வைக் குறைக்க உதவும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, வீட்டில் பயன்படுத்தப்படும் தொலைக்காட்சியின் இன்ச் அளவைப் பொறுத்து பார்க்கும் தூரத்தையும் சரியாகத் தேர்வு செய்வது அவசியம்.

 

24 இன்ச் அளவுள்ள டிவியைப் பார்ப்பவர்கள் சுமார் 3 அடி தூரத்திலும், 32 இன்ச் டிவியைப் பார்ப்பவர்கள் 4 முதல் 6.5 அடி இடைவெளியிலும் அமரலாம். அதேபோல், 40 இன்ச் திரைக்கு சுமார் 8 அடி தூரம் பரிந்துரைக்கப்படுகிறது. பெரிய திரைகளைக் கொண்ட தொலைக்காட்சிகளைப் பயன்படுத்துபவர்கள் அதற்கேற்றவாறு அமரும் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

 

50 இன்ச் அளவுள்ள டிவிக்கு 6.25 முதல் 10.5 அடி வரையிலும், 60 இன்ச் டிவிக்கு 7.5 முதல் 12.5 அடி வரையிலும் இடைவெளி வைத்துக்கொள்ளலாம் என குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், இவை பொதுவான வழிகாட்டுதல்கள் மட்டுமே. டிவியின் தெளிவுத்திறன், அறையின் அமைப்பு மற்றும் பார்ப்பவரின் பார்வைத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து ஏற்ற தூரம் மாறுபடலாம்.

 

மேலும், தொலைக்காட்சியைத் தொடர்ந்து நீண்ட நேரம் பார்ப்பதைத் தவிர்த்து இடையிடையே கண்களுக்கு ஓய்வு அளிப்பதும், அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்வதும் நல்லது. கண் எரிச்சல், தலைவலி அல்லது பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகுவது அவசியம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.