தூத்துக்குடியில் மது அருந்தியபோது தகராறு: மீனவர் குத்திக்கொலை; நண்பருக்கும் காயம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் ஸ்னோவின் (26), தனது நண்பர் சூசை (28) ஆகியோருடன் கடலுக்குச் சென்று திரும்பிய பின்னர் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நான்கு பேரும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதற்கிடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதாகத் தெரிகிறது.
ஆத்திரமடைந்த நான்கு பேரும் ஸ்னோவினைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. அவரைத் தடுக்க முயன்ற சூசைக்கும் தலையில் கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஸ்னோவின் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




கருத்துகள் (0)