வெள்ளி, அக்டோபர் 23, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சாத்தான்குளம் அருகே கோயிலில் துணிகரத் திருட்டு: 5 கதவுகள், 3 உண்டியல்கள் உடைப்பு!

சாத்தான்குளம் அருகே கோயிலில் துணிகரத் திருட்டு: 5 கதவுகள், 3 உண்டியல்கள் உடைப்பு!

 

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு விலக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நெட்டுவான்கோட்டை ஹரிஹர சாஸ்தா கோயிலில் மர்ம நபர்கள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கோயிலின் ஐந்து கதவுகளையும், மூன்று உண்டியல்களையும் உடைத்து, அவற்றில் இருந்த ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

 

மேலும், கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைச் சேமிக்கும் டி.வி.ஆர். கருவியையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். திருட்டில் ஈடுபட்டவர்கள் யார், அவர்கள் எவ்வாறு தப்பிச் சென்றனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.