திருச்சி அருகே மனைவி கண்முன்னே கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

திருச்சி மாவட்டம் குழுமணி அருகே ஆனந்த் (40) என்ற கூலித் தொழிலாளி, அவரது மனைவி கண்முன்னே மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், குழுமணி பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)