விமானப்படை தளத்தை உளவு பார்த்ததாக இளைஞர் கைது – குஜராத்தில் விசாரணை தீவிரம்!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தைச் சுற்றுலாப் பயணி போலச் சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்ததாகக் கூறப்படும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சஹருல் இஸ்லாம் (22) என்பவரை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில், விமானப்படை தளத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செயல்பாட்டின் பின்னணியில் தாக்குதல் நடத்தும் திட்டம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஆய்வு முடிவுகள் மற்றும் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின் அடிப்படையில் கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)