ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
அரசியல்

ஸ்டாலினை சகோதரர் என புகழ்ந்த ராகுலுக்கு திமுக ஐடி விங் பதிலடி!

ஸ்டாலினை சகோதரர் என புகழ்ந்த ராகுலுக்கு திமுக ஐடி விங் பதிலடி!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று (நவ.29) சென்னை வர உள்ளனர். இந்நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த பதிவில் மு.க.ஸ்டாலினை பாராட்டிய ராகுல் காந்தி, அவரை தனது சகோதரர் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் விமர்சனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதில், “நீங்கள் முதுகில் குத்திய சகோதரர்..!” என குறிப்பிட்டு ராகுல் காந்தியின் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளதாகவும், தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.