சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. இன்று தென்கொரியாவுடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. இன்று தென்கொரியாவுடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா!

போபாலில் நடைபெற்று வரும் 9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி இன்று தனது அடுத்த லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை எதிர்கொள்ள உள்ளது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் களமிறங்க உள்ளனர்.

 

சலிமா டேட்டே தலைமையிலான இந்திய அணி, தனது முதல் போட்டியில் மலேசியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்திய அணி முனைப்புடன் உள்ளது.

 

இன்றைய போட்டி அட்டவணையில் சீனா - மலேசியா மற்றும் தாய்லாந்து - ஜப்பான் அணிகளுக்கு இடையேயான மோதல்களும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி, அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.