ஞாயிறு, அக்டோபர் 25, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

11 வயதில் உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி செஸ் வீராங்கனை!

11 வயதில் உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி செஸ் வீராங்கனை!

 

 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன், தனது 11 வயதில் சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்திற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்து உலக சாதனை படைத்துள்ளார். மாண்டினீக்ரோவில் நடைபெற்ற ஐரோப்பிய மகளிர் செஸ் கிளப் கோப்பை தொடரில், 7 ஆட்டங்களில் 5.5 புள்ளிகளைப் பெற்றார். இறுதிச்சுற்றில் ஸ்வீடன் வீராங்கனை விக்டோரியா ஜோஹன்சனை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார்.

 

இதன் மூலம், 1988-ஆம் ஆண்டு தனது 12 வயதில் இந்தச் சாதனையைப் படைத்த ஹங்கேரி செஸ் ஜாம்பவான் ஜூடித் போல்காரின் சாதனையை 38 ஆண்டுகளுக்குப் பிறகு போதனா முறியடித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் போதனாவின் குடும்பத்தின் பூர்வீகம் தமிழ்நாட்டின் திருச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனை சர்வதேச செஸ் உலகில் கவனம் பெற்றுள்ளது.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.