15 பெண்களைத் திருமணம் செய்து ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக இளைஞர் கைது!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 35 வயதான நரேந்திர சர்மா என்பவர், 15 பெண்களைத் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்ட அவர், அவர்களை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்ததாகக் கூறப்படும் நரேந்திர சர்மா, திருமணத்திற்குப் பிறகு அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மிரட்டியுள்ளார். இதன் மூலம் சுமார் ரூ.18 லட்சம் வரை பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் நரேந்திர சர்மாவைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.




கருத்துகள் (0)