திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
அரசியல்

பல்லடம் நகர தவெக செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் ஆதரவாளர்கள் அதிருப்தி!

பல்லடம் நகர தவெக செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் ஆதரவாளர்கள் அதிருப்தி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் ராமமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அமைச்சர் என். ஆனந்த் உத்தரவின் பேரில், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் மற்றும் திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சங்கர் ஆகியோர் இந்த நடவடிக்கை குறித்து அறிவித்துள்ளனர்.

 

கட்சியின் இந்த முடிவு பல்லடம் தவெக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டச் செயலாளர் சங்கர் செய்த தவறுகளை கட்சித் தலைமையிடம் எடுத்துரைத்ததன் காரணமாகவே ராமமூர்த்தி நீக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

ராமமூர்த்தி நீக்கப்பட்ட விவகாரம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்ட தவெக நிர்வாகிகளிடையே இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தியால் அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.