செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
இந்தியா

வெவ்வேறு மதத்தினர் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தில் பதிவு செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

வெவ்வேறு மதத்தினர் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தில் பதிவு செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது சட்டப்படி செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் இந்துப் பெண்ணுக்கும் கிறிஸ்தவ இளைஞருக்கும் இடையே இந்து திருமணச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்ய, திருமணம் செய்துகொள்ளும் இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தினர். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர்.

 

மேலும், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் திருமணப் பதிவு நடைமுறைகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம், உத்தரவை அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.