செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ஹேண்ட் பம்பில் தண்ணீருக்கு பதிலாக சாராயம் வந்ததால் அதிர்ச்சி!

ஹேண்ட் பம்பில் தண்ணீருக்கு பதிலாக சாராயம் வந்ததால் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீட்டில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஹேண்ட் பம்பை இயக்கியபோது தண்ணீருக்குப் பதிலாக சாராயம் வெளியே வந்தது. இதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

 

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், ஹேண்ட் பம்பின் அடிப்பகுதியில் ரகசியமாக தொட்டி அமைத்து அதில் சாராயத்தை நிரப்பி வைத்திருந்தது தெரியவந்தது. வெளியே தெரியாத வகையில் சாராயத்தை மறைத்து வைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். “இனிமேல் குடிக்க டாஸ்மாக் போக வேண்டியதில்லை, வீட்டில் இந்த குழாயைத் திறந்தாலே போதும்” என கிண்டலாக விமர்சித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.