செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

செக்கானூரணி ஓட்டுநர் மரண வழக்கில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்!

செக்கானூரணி ஓட்டுநர் மரண வழக்கில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்!

செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவாரம் அருகே அவரது நண்பர்களான அன்பரசன் மற்றும் அருண் ஆகியோருக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 ஏலக்காய் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் எனக் கூறப்படுகிறது.

 

முன்னதாக, லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 67 ஏலக்காய் மூட்டைகள் எரிந்து சேதமடைந்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எரிந்ததாகக் கூறப்பட்ட ஏலக்காய் மூட்டைகள் தொடர்பான விசாரணையில், மீதமிருந்த மூட்டைகள் வேறு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

 

ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில் இந்தப் புதிய கண்டுபிடிப்பு விசாரணையில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ள நிலையில், ஏலக்காய் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டதன் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.