கொளத்தூர் இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளர் தேர்வில் புதிய திருப்பம்!

வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் யார் போட்டியிடப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதம் எழுந்துள்ளது. முன்னதாக, VS பாபுவின் மகன் VSB சதீஷ்குமார் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என தகவல்கள் பரவின.
இந்நிலையில், வேட்பாளர் தேர்வு தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கொளத்தூர் தொகுதி பொறுப்பாளரும் மாவட்டச் செயலாளருமான தணிகாவுக்கு அப்பகுதி மக்களிடையே நல்ல ஆதரவு இருப்பதாக கட்சி தலைமையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்து முதல்வர் விஜய்யின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ஏற்கனவே பேசப்பட்ட VSB சதீஷ்குமார் பெயருடன் தணிகாவின் பெயரும் வேட்பாளர் பரிசீலனையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கொளத்தூர் தொகுதியில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.




கருத்துகள் (0)